districts

img

எக்ஸல் கல்லூரியில் ஆண்டு விழா

பள்ளிபாளையம், பிப்.19- குமாரபாளையத்திலுள்ள எக்ஸல் கல்லூரியின் 17 ஆவது ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்வி  நிறுவனங்களில் உள்ள எக்ஸல் வணிகவியல் மற்றும் அறி வியல் கல்லூரியின் 5 ஆவது மற்றும் எக்ஸல் கல்வியியல் கல்லூரியின் 17 ஆவது ஆண்டு விழா, எக்ஸல் கல்வி நிறுவ னத்தின் தலைவர் ஏ.கே.நடேசன், துணைத்தலைவர் ந.மதன் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் விமல் நிஷாந் ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ் வில் சிறப்பு விருந்தினராக திரைக்கலைஞர் அதுல்யா ரவி  கலந்து கொண்டு, தமது திரையுலக வாழ்க்கை பற்றியும்,  மாணாக்கர்களின் கல்வியின் தேவை குறித்தும், ஆசிரியர்க ளுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை குறித்தும் சிறப்புரை யாற்றினார். இதன்பின் பல்வேறு போட்டிகளில் பல்கலை கழக பட்டியலில் இடம்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு  சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக, உள் தர மதிப்பீட்டு குழுவின் (IQAC) சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி  கூறினார்.