அண்ணாமலை மேற்கொண் டிருந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல் லடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட் டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற்று, இந்த மாநாட்டில் பிரதமரை வரவேற்பார்கள், இது தமிழகத்தின் திருப்புமுனை மாநாடு என்றெல்லாம் பாஜக அண்ணா மலை ஓவர் பில்டப் செய்து வந்தார். ஆனால், நிஜத்தில் ஒன்றும் இல்லை என் பதே உண்மை. ஏதோ மிகப்பெரும் அணிச்சேர்க் கையை காட்டப் போகிறார்கள் என பிம் பத்தைக் கட்டமைத்த நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழருவிம ணியன், கு.செல்லமுத்து போன்ற, அரசி யலில் திவாலாகிப் போனவர்கள் அங்கே காட்சியளித்தனர். இம்மாநாட்டிற்கு தமிழகம் முழுவ திலும் இருந்து ஆட்கள் வரவழைக் கப்பட்டு இருந்தனர். பாஜக மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் போக்குவ ரத்து, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து, குறிப்பாக திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராள மான வட மாநில தொழிலாளர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டி ருந்தனர். திருப்பூரில் பெரிய பனியன் கம் பெனி உரிமையாளர்களிடம் ஒரு பேருந் தையும், குறைந்தபட்சம் 100 பேரையும் அனுப்பி வைக்க வேண்டும், என்று “அன்பாக மிரட்டிக் கேட்டதாக” நடை பயிற்சி மைதானங்களில் சிலர் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்ற வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் கேட்டபோது, பீகார் மாநிலத்தில் இருந்து திருப்பூர் சிட்கோ பகுதியில் வேலை செய்வதா கவும், செவ்வாயன்று மோடி வருவ தால் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் மூலமாக இந்த மாநாட்டிற்கு வந் ததாக தெரிவித்தனர். மேலும், அவரை போல பல பேர் இந்த மாநாட்டிற்கு வந் துள்ளதாகவும், போக்குவரத்து, உணவு உள்ளிட்டவற்றை மாநாட்டிற்கு அழைத்து வந்தவர்களே ஏற்பாடு செய்து கொடுத்ததாக அந்தத் தொழி லாளி தெரிவித்தார். விஐபி பாஸ் தாராளம் பொதுவாக மிக மிக முக்கியப் பிரமு கர் பங்கேற்கும் இதுபோன்ற நிகழ்வுக ளுக்கு விஐபி பாஸ் என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் தந்து பிரமுகர்களை வரவழைப்பார்கள். ஆனால் இந்த மாநாட்டு துண்டு நோட்டீஸ் போல விஐபி பாஸ்கள் வாரி வழங்கப்பட்டன. பாஜகவின் நேரடி ஆதரவாளர்கள் மட்டுமின்றி உறவினர்கள், தங்கள் சாதிக்காரர்கள் என பலருக்கும் விஐபி பாஸ் கொடுத்துள்ளனர். பிரத மர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உங்க ளுக்கு விஐபி பாஸ் கொடுத்திருக்கி றோம், குடும்பத்துடன் வாருங்கள் என்று அழைத்துள்ளனர். எனவே தங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள னர் என்று கருதி பாஜக அரசியலைப் பற்றி தெரியாத பலரும் இந்த நிகழ்ச் சிக்கு வந்துள்ளனர். அதேசமயம் விஐபி பகுதியில் வட மாநிலத்தவர்கள் பெரும ளவு காணப்பட்டனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பாஜ வின் இளைஞரணி நிர்வாகிகள் சிலர், பிரதமர் மோடி பேசுகையில் அதை கவ னிக்காமல் சிரித்துப் பேசிக் கொண்டி ருந்தனர். அவர்களிடம் பிரதமரின் உரையை கவனிக்கவில்லையா என்று கேட்டபோது, மோடியின் மீது எங்க ளுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. அடுத்த பிரதமரே அண்ணாமலைதான் என்றனர். இதைக்கேட்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
இளைஞர்கள் அவநம்பிக்கை
கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அரு காமையில் உள்ள கிராம இளைஞர் கள் சிலரிடம் கூட்டம் குறித்து கேட்ட போது, எங்களுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இப்பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. குடி நீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். அதுகுறித்தெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நான் கல்லூரி செல்கி றேன் என்னால் தினசரி பெட்ரோல் போட முடியவில்லை. பாஜவை எப்படி நம்ப முடியும்? இவர்கள் பெரும்பாலும் சொல்வது எதையும் செய்வதில்லை என்றனர். மோடி நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளதாகவும், அதற்கு பாஜக தான் காரணம் என கூறுகிறாரே என்று இன்னொருவரிடம் கேட்டதற்கு, இப் போதெல்லாம் எனக்கு தினசரி வேலை இருபதில்லை. வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும்தான் வேலை இருகிறது. இங் குள்ள பனியன் கம்பெனிகளில் பெரும் பாலும் வட மாநில தொழிலாளர்கள் தான் நிரம்பியுள்ளனர். அவர் சொல் வது உண்மையாக இருந்தால், வட மாநி லத்தவர்கள் ஏன் இங்கு வர வேண்டும். அவர்கள் மாநிலத்திலேயே வேலை செய்யலாமே என்றார். கூட்டம் நடைபெற்ற பகுதிகள் முழுவதும் குப்பைகள் சூழ்ந்து காணப்பட்டது.
மது பிரியர்கள் குடித்துவிட்டு விழுந்து கிடந் தது. பெண் காவலரிடம் பாஜவினர் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டு, தகராறில் ஈடுபட்டனர். போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்தியது உட்பட பல சர்ச்சைகளும் நடைபெற்றது. கூட்டம் ஏற்பாடு செய்தபோதே பல் லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பாஜக வினர் சிலர் அராஜகமாக வசூல் வேட்டை நடத்தினர் என்று புகார்கள் எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ கோடிக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவழித்து, பிரம்மாண்டமாக கூட்டம் நடத்தி, கடும் பிரயத்தனம் செய்தும் உளவுத் துறை கணக்குப்படியே அதிகபட்சம் 30 ஆயி ரம் பேரைத்தான் பாஜகவால் மாநிலம் முழுவதும் இருந்து திரட்ட முடிந்தது. ஆனால் வழக்கமாக தங்களின் அதிகா ரத்தைப் பயன்படுத்தி பிரபல ஊடகங் களில், செய்தித்தாள்களில் லட்சக்க ணக்கானோர் திரண்டனர் என்றும், திருப் புமுனை மாநாடு என்றும் கண கச்சித மாக பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ஊதிப்பெருக்கிக் காட்டிய இந்த பலூனை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் காற்றைப் பிடுங்கி தொளதொ ளத்துப் போகச் செய்வார்கள் என் பதை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர் தல் நிரூபிக்கும். -
லிவின்