districts

img

இன்றைய இந்திய சூழலில் அம்பேத்கரின் தேவை அதிகரித்துள்ளது

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேட்டி

கோவை, டிச. 6 – இன்றைய இந்திய அரசி யல் சூழலில் சட்டமேதை அம்பேத்கரின் தேவை அதிகரித் துள்ளது என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தெரிவித்துள்ளார். புரட்சியாளர் சட்டமேதை அம் பேத்கரின் 63-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நி கழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னருமான பி.ஆர்.நடராஜன் பங் கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் களிடம் பேசிய பி.ஆர்.நடராஜன் கூறுகையில்,

இந்தியாவின் அனைத்து மக்க ளுக்கும் அற்புதமான சட்டத்தை வடிவமைத்து தந்தவர் சட்டமேதை அம்பேத்கர். இன்றைய இந்திய சூழ லில் அம்பேத்கரின் தேவை அதிகரித் துள்ளது. சாதியற்ற, மதமற்ற அனை வரும் சமம் என்ற நிலையில் தேசத்தை உருவாக்க மிக அர்ப்ப ணிப்போடு செயல்பட்ட மாபெ ரும் தலைவர் அம்பேத்கர். அவ ரின் கருத்துக்களை மேலும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியா ரிய அமைப்புகள் இணைந்து முயற்சி மேற்கொள்வோம். அம்பேத்கரின் சிலையை கோவை மாநகரின் மையப்பகு தியில் நிறுவவேண்டும் என இடது சாரி அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி மற்றும் காவல் துறை  மாவட்டத்தின் மையப்பகு தியில் அம்பேத்கர் சிலை வைப்ப தற்கான உத்தரவும், உரிய நடவ டிக்கையை மேற்கொள்ள வேண் டும் என்றார்.  முன்னதாக, அம்பேத்கர் நினைவு அனுசரிப்பு நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட சிஐடியு, வாலிபர், மாணவர், பிஎஸ்என்எல், மின்வாரியம், சாலையோர வியாபா ரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.