districts

img

அகில இந்திய வேலை நிறுத்தம் வருமான வரி ஊழியர்கள் பங்கேற்பு

சேலம், மார்ச் 14- மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் 14  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெறும் அகில இந்திய பொது வேலைநிறுத் தத்தில் வருமான வரி ஊழியர்கள் பங்கேற் பர் என வருமான வரி ஊழியர்கள் சம்மேள னத்தின் அகில இந்தியத் தலைவர் எம்.வெங் கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சேலத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, இந்திய அளவில் வருமான வரித்துறை ஊழியர்கள் பல்வேறு சிக்கல் களை எதிர்கொண்டு வருகின்றனர். எங்க ளது கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசு கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.குறிப்பாக, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வருமானவரித் துறையில் நிரப்பப்படாமல் உள்ள 60 விழுக்காடு காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும். கருணை அடிப்படையில் வாரிசுதாரர் களுக்கு வேலை வழங்கிட வேண்டும். வரு மான வரித்துறை ஊழியர்களின் பணி நிய மன விதிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை  நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. வருமானவரித் துறையில் மட்டும் இந் திய அளவில் 36 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ள னர்.  வருமான வரித் துறையை வேறு துறை யுடன் இணைப்பதாக வரும் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆன் லைன் மூலம் வருமான வரி செலுத்தப்படுவ தில்  ஊழியர்களுக்கு முறையான பயிற்சி கள் வழங்கப்படவில்லை. அதனால் சிக்கல் கள் நீடிக்கிறது. ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தைச் சேர்ந்த  ஊழியர்கள் தமிழகத்தில் பணியாற்றுவதில் நிலவி வரும் சிக்கல்களை களைந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.