districts

img

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம்

நாமக்கல், ஜூன் 7- நூறுநாள் வேலை திட்ட கூலியை முறை யாக வழங்க வலியுறுத்தி திருச்செங்கோட் டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர்.  நாமக்கல் மாவட்டம், ஆனங்கூர் ஊராட் சியில் நடைபெற்ற இயக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் ரூ.281 தினக்கூலி வழங்கப்படுகிறது. இந்த கூலியும் பெரும் பான்மையான ஊராட்சிகளில் முழுமையாக வழங்கப்படுவதில்லை. கூலியை குறைவா கவும், தாமதமாகவும் வழங்கப்படுகிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறி யதைப்போல 100 நாட்கள் வேலையை  கூடுதலாக்கி 150 நாட்கள் வேலை தர வேண் டும். தினக்கூலியில் ரூ.100 உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சி.துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய துணை  செயலாளர் மீனா முருகேசன், சங்க நிர்வாகி ஆர்.குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.