districts

img

சத்துணவு பொருட்களை வெளிச்சந்தையில் விற்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், மார்ச் 30 – நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர் களுக்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வரை சம் பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இது வரை சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய  அரசு இத்திட்டத்திற்குரிய நிதியை வழங்கிய  வுடன் சம்பளம் வழங்கப்படும் என்று மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் வியாழனன்று ஆட்சியரகத்தில்  ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெய்பீம், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரா யணன் மற்றும் வேளாண்மை, கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பல் வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து விவ சாயிகள், விவசாய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் மனு அளித்து பேசியதாவது:  உடுமலை வட்டம், ஆண்டியக்கவுண்டனூரில்  பன்னாட்டு நிறுவனம் முட்டைக்கோழிப் பண்ணை நடத்துவதற்காக ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு நிலத்தை மீட்டு ஏழை  விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடுக்க  வேண்டும். உடுமலை வட்டம், ஆத்துக்கிணத் துப்பட்டியில் உபரிநிலமாக அறிவிக்கப்பட்ட இடத்தை ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்க  வேண்டும். அமராவதி ஆற்றுப் படுகையிலும், குதி ரையாற்று நீர்வழிப் பாதையில் கொழுமம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது அப்ப குதி விவசாய பாதைக்கு முக்கிய பகுதியா கும். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும். சிறு விவசாயிக்கு அரசுத்துறையினர் அத் துமீறி நிர்பந்தம் கொடுத்து, கோழிப்பண்ணை  அமைக்கும் பணியை நிறுத்த முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில் பதில் கூறிய ஆட்சியர்,  நூறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு  நிதி வந்தபிறகு சம்பளம் தரப்படும் என்று தெரி வித்தார். சிறு விவசாயி அமைக்கும் கோழிப் பண்ணை பணியை மாசுகட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகள் நிறுத்த முயல்வது குறித்து கடும்  ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிலையில், 5  ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வளர்க்கும் சிறு  விவசாயிகள் பண்ணைகள் மாசு கட்டுப் பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டிய தில்லை, அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தில்லை என்று தெரிவித்தார். மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்த தற்கு மதுசூதனன் உள்ளிட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பன்னாட்டு நிறு வனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோழிப் பண்ணை நடத்தி வருவது பற்றி பல முறை  புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக் காதது ஏன்? ஏழை எளிய சிறு விவசாயிகளை  மிரட்டுவதா? என்று கண்டனம் தெரிவித்த னர். பிஏபி கால்வாயில் பல்வேறு பகுதிகளில்  மற்றும் உப்பாறு ஓடை ஆகியவற்றில் குப்பை கள், கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவு கள் கொட்டப்பட்டு பெரும் சுற்றுச்சூழல்  சீர்கேடு ஏற்படுத்தப்படுகிறது. புழுக்கள் உரு வான இந்த தண்ணீரால் கால்நடைகள் உயிரி ழக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் விவசா யிகள் கூறினர். அதிகாரிகள் மெத்தனமாக பதில் கூறிய நிலையில், ஆட்சியர் தலையிட்டு  நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை தரும்படி  கூறினார். ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சத்துடன் உள் ளதால் அந்த சிறுத்தையை விரைந்து பிடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  உடுமலை பகுதி குடிநீர் பிரச்சனையில் பத்து நாட்களில் பிரச்சனை சரி செய்யப்படும்  என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ஆட்சியர் பதிலளித் தார். இக்கூட்டத்தில் அலகுமலையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தக் கூடாது என்று விவசாயி கள், கிராம மக்கள் நேரில் ஆட்சியரிடம் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசின் கவனத் துக்கு தகவலைக் கொண்டு செல்வதாக ஆட் சியர் பதில் கூறினார்.   கிராமங்களில் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து  விவசாயிகள் இக்கூட்டத்தில் முறையிட்ட னர்.

;