districts

img

திறப்பு விழாவிற்கு ஏங்கும் ரேசன் கடை

பொள்ளாச்சி, அக்.14- ரேசன் கடை கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாத காலமாகியும், திறப்பு விழா காணாத தால், மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வர  மார்க்சிஸ்ட் கட்சியினர், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவகலத்தில் திங்களன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆச்சிபட்டி கிளை சார்பில் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில், அ.சங்கம் பாளையம் மகாலட்சுமி நகர் புதிய ரேசன் கடை கட்டி 6 மாதமாகி உள்ளது. இது, தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வரவில்லை. உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் குரும்பபாளையம் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் மண் இட்டேரியில் முழங்கால்  அளவு மழைநீர் தேங்குவதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இப்பகுதியில், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ள னர்.  முன்னதாக சிபிஎம் ஆச்சிபட்டி கிளைச் செயலாளர் எஸ்.மாதீஸ்வரன் தலைமை யில், மூத்த தோழர்கள் எம்.கணேசன், ஆர்.லோகநாதன் மற்றும் எஸ்.ராஜேஷ் உள்ளிட் டோர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.