பொள்ளாச்சி, ஜன.31- பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைப்புலியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை மாவட்டம், 956 சதுர கிலோமீட்டரில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, உடுமலை, அம ராவதி என ஆறு வனச்சரகம் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, புலி, சிங்கவால் குரங்கு, செந்நாய், புள்ளிமான், வரையாடு, மற்றும் இருவாட்சி பறவை மற்றும் அபூர்வ தாவரங்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று வால் பாறை கவர்கல் அருகே உள்ள ஊமையாண்டி முடக்கு சாலையில் ஒற்றை புலி உலா வந்தது. இதை அவ்வழியே காரில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற் போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.