districts

img

பாலாரிவட்டம் ஊழல் பாலத்திற்கு வாலிபர் சங்கம் இறுதி அஞ்சலி

கொச்சி, ஜுன் 23- ‘ஊழல்வாதிகளை சிறையில் அடையுங்கள், ஊழல் பாலத்திற்கு இறுதி அஞ்சலி’ என்கிற முழக் கங்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எர்ணாகுளம் மாவட்டக்குழு சார்பில் பாலாரி வட்டம் பாலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடை பெற்றது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சியின் ஊழல்களுக்கு சாட்சியாக பாலாரிவட்டம் மேம் பாலம் உள்ளது. கட்டி முடிக்கப் பட்ட மூன்றே ஆண்டுகளில் மக்கள் பயன்படுத்த முடியாதநிலையில் பாலம் மூடப்பட்டுள்ளது. தில்லி, கொச்சி மெட்ரோ மேம்பால பணிகளில் வல்லுநரான மூத்த பொறியாளர்  ஸ்ரீதரன் தலை மையில் சென்னை ஐஐடி வல்லு நர்களை உள்ளடக்கிய குழு பாலத்தைக் குறித்து ஆய்வு செய்து அடுத்தவாரம் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.      இந்நிலையில் ஏராளமான இளைஞர்கள்  பாலத்தின் பகுதி களை பாடையாக கட்டி தோள்க ளில் சுமந்து சென்றனர். இந்த போராட்டத்தை பேராசிரியர் எம்.கே.ஸானு துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கொச்சி நகரத்தின் போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வு கிடைத்ததாக மக்கள் நம்பிய நிலையில் மூன்றே ஆண்டு களில் பாலம் தகர்ந்துள்ளது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இதற்கு காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாலத் தின் பெயரால் பெரும் தொகையை  அரசின் கஜானாவிலிருந்து பெற் றவர்களிடமிருந்து இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்றார்.  

ஊழலுக்கு களம்  அமைத்த யுடிஎப் 

பாலம் நிர்மாண முறைகேடில் உம்மன்சாண்டி, வி.கே.இப்ராகிம் குஞ்சு போன்றவர்களோடு முன் னாள் எம்பி கே.வி.தாமசுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என டாக்டர் செபாஸ்டின் பால் வலியுறுத்தினார். தான், எம்பியாக இருந்தபோது பாலாரி வட்டம், பாலாரிவட்டம் வைற்றில குண்டனூர் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. அந்த முடிவை இறுதிப்படுத்தும் காலகட்டத்தில் கே.வி.தாமஸ் எம்பி  ஆனார். மேம்பாலத்துக்கு பதிலாக பாலாரிவட்டம் முதல் குண்டனூர் வரை எலிவேட்டட் ஹைவே அமைக்க கே.வி.தாமஸ் வலியு றுத்தினார். அதற்கு தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தை விலக்கி வைத்துவிட்டு யுடிஎப் அரசு பாலம் பணியை சொந்த பொறுப்பில் ஏற்றெடுத்தது. இது ஊழலுக்கு களம் அமைத்துக் கொடுத்ததாக செபஸ்டின்பால் கூறினார்.  எம்.கே.ஸானு, டாக்டர்.செபஸ் டின்பால், டி.ஏ.சத்தியவான் உள் ளிட்டோர் பாலத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநில தலைவர் எஸ்.சதீஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஏ.எம்.ரஹீம்,ள மாவட்டச் செயலாளர் ஏ.ஏ.அன் ஷாத் உள்ளிட்டோர் பேசினர்.
 

;