மதுரை:
சிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிபிஐ மூத்த தலைவர்களில் ஒருவரும் தோழர் தா.பா என கட்சியினரால் அழைக்கப் பட்டவருமான தோழர் தா.பாண்டியன் சென்னையில் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் வெள்ளியன்று காலை 10மணியளவில் காலமானார்.
அங்கிருந்து தா.பாவின் உடல்அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிபிஐ மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தோழர் தா.பாண்டியனின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரானஉசிலம்பட்டியை அடுத்துள்ள கீழவெள்ளமலை பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளமலைபட்டி டேவிட் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சி.மகேந்திரன், பி.சேதுராமன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாசன் மற்றும் அனைத்து கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா ஆகியோர் தா.பா. உடலுக்கு மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர்.திமுக சார்பில் தங்க. தமிழ்ச்செல்வன், சரவணன் எம்எல்ஏ, பெரியார் தொண்டர் பி.வரதராசன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, சிபிஎம் புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் செ.முத்துராணி, வி.பி.முருகன், உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.ராமர், மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜெயபால், கண்மார்க் செல்வராஜ், வழக்கறிஞர் ராஜன், தமுஎகச சார்பில் மாநில நிர்வாகி கருணாநிதி, கோடங்கி சிவமணி, உத்தப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் அர்ச்சுணன் ஆகியோர் தா.பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர். தா.பா.வின் உடல் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு டேவிட் பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் தோழர் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி உரைநிகழ்த்தினர்.