ஆலப்புழா:
ஆர்எஸ்எஸ் கொலைக் கத்திக்குபலியான 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனும், இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) ஊழியனுமான அபிமன்யு, தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், தோழர்களின் கண்ணீருக்கு இடையே, இந்த மண்ணிலிருந்து விடைபெற் றான்.
வெள்ளியன்று (ஏப்.16) காலை டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் ஏ.ஏ. ரஹீம், எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் சச்சின் தேவ் உள்ளிட்ட எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ தலைவர்கள்ஓச்சிரா பராப்ரஹ்மா மருத்துவமனையில் இருந்து அபிமன்யு-வின்உடலைப் பெற்றனர்.
அஞ்சலி முழக்கங்கள் நிறைந்த சூழ்நிலையில் தலைவர்கள் அபிமன்யு உடல்மீது எஸ்எப்ஐ கொடியை போர்த்தினர். பின்னர் வள் ளிக்குந்நத்திற்கு இருசக்கர வாகன பேரணியுடன் அபிமன்யுவின் உடல் கொண்டு வரப்பட்டது.வழிநெடுகிலும், தோழர்கள்,நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அபிமன்யுவிற்கு தங்களின்கண்ணீரை அஞ்சலி ஆக்கினர்.
பிற்பகலில் அபிமன்யுவின் உடல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் உள்ளூர் அலுவலகத்திற்குகொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களின் இளம் தியாகிக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர். தந்தை அம்பிளிகுமார், மூத்த சகோதரர் அனந்துஉள்ளிட்ட உறவினர்கள் கடைசிமுத்தத்தை அளித்து, அபிமன்யுவிற்கு விடை கொடுத்தனர்.