districts

“வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை”

கோவை, ஜன.31- வால்பாறையில் நகராட்சி கூட்டத் திற்குள் திடீரென நுழைந்து, “வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை; ஆகையால் கூட்டத்தை நடத்தக்கூ டாது” எனக்கூறி தகராறில் ஈடுபட்டவர் களால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை நக ராட்சி கூட்டம் கூட்டரங்கில் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில், துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையர் பாலு ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தெருவிளக்கு எரியாது தொடர்பாகவும், பள்ளி சத் துணவு மையம் பராமரிப்பு, குடிநீர் தொட்டி பராமரிப்பு, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப் போது வால்பாறை, அண்ணா நகர் பகு தியைச் சேர்ந்த 15 பேர் அனுமதியின்றி திடீரென கூட்டத்திற்குள் நுழைந்து நக ராட்சி தலைவரிடமும், ஆணையரிட மும், “வளர்ச்சி பணிகள் ஏதும் நடை பெறவில்லை. அதனால் மன்ற கூட் டத்தை நடத்தக்கூடாது” எனக்கூறி வாக் குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வார்டு உறுப்பினர்கள், “நக ராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தெரிவியுங்கள்; மன்ற கூட்டத் திற்குள் வரக்கூடாது” என்று கூறினர். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், கவுன்சிலர்களிடம் வாய் தகராறில் ஈடு பட்டதால், மன்ற கூட்டம் பாதியில் நிறுத் தப்பட்டது. இதுகுறித்து ஆணையர் வால் பாறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் துறை யினர் வந்ததும், அந்த நபர்கள் அங்கி ருந்து சென்றுவிட்டனர். இதனைத்தொ டர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் கவுன் சிலர்கள், நகராட்சி மன்ற கூட்டரங்கில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டவர்க ளால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது. எனவே, அத்துமீறி நுழைந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர் கள் ஆணையருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தனர். இந்த பரிந்துரை கடிதத் தின் அடிப்படையில் நகராட்சி ஆணை யர் பாலு வால்பாறை காவல் நிலையத் தில் புகாரளித்துள்ளார்.

;