districts

நீலகிரியில் 70.93 சதவீதம் வாக்குப் பதிவு

உதகை, ஏப்.21- நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் 70.93  சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர், பவானி சாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவி நாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளர்கள் இடம் பெறிருந்தனர். 6  தொகுதியிலும் மொத்தம் 809 இடங்க ளில் 1,619 வாக்குசாவடி மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்  வெள்ளியன்று 18 ஆவது நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக துவங்கும். ஆனால், வெள்ளியன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறு விறுப்பாக துவங்கியது. இதனால், இம்முறை வாக்குப்பதிவு  எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள் ளது. இதில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 76.08 சதவீதமும், உதகை  சட்டமன்ற தொகுதியில் 67.25 சதவீத மும், கூடலூர் சட்டமன்ற தொகுதியில்  67.05 சதவீதமும், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 65.3 சதவீதமும், மேட்டுப் பாளையம் சட்டமன்ற தொகுதியில் 72.28 சதவீதமும், அவிநாசி தொகுதி யில் 72.8 சதவீதம் என நீலகிரி தொகு தியில் 70.93 சதவீதம் வாக்குகள் பதிவா கியிருந்தன.