districts

img

சிலம்பப் போட்டி - 600 பேர் பங்கேற்பு

சேலம், டிச.5-  சேலம் மாநகரம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார் பில் மாவட்ட அளவிலான சப் ஜூனி யர், ஜுனியர் மற்றும் சீனியர் சிலம் பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழ கம் சார்பில் நடைபெற்ற சிலம்பாட்ட  போட்டியில் சங்கத்தின் செயலா ளர் ரத்தினகுமார் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட தலைவர் பிர வீன்குமார் தலைமை தாங்கினார். சேலம் வனப்பாதுகாவலர் பெரிய சாமி, சிறுமலர் மேல்நிலைப் பள்ளி யின் தலைமை ஆசிரியர் செபஸ்தி யான் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் நாற்பத்தி எட்டு பிரிவுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதிர் அவர்களின் தனித்திறமை மற்றும் நேரடி போட்டியின் மூலம் வெற்றி யாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு ஆனந்த் மோட்டார்ஸ் நிர் வாக இயக்குனர் ஆனந்த் பழனி வேல், ஸ்ரீரங்கா ஜுலரி நிறுவனர்  ஸ்ரீதர், சிவராஜ் சித்தா மெடிக்கல்  கல்லூரி சேர்மன் சிவராஜ் சஞ்சய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சிலம்பம் கழக நிர்வாகிகள் மாணவ -மாணவிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.