districts

img

அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு பி.ஆர்.நடராஜன் எம்.பி நேரில் ஆறுதல்

திருப்பூர், ஜன.25- திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் அண் ணாமலை, ஜி.என்., திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த  மாணவர்கள் 6 பேர் கடந்த 17ஆம் தேதி தாராபுரம் அருகே  உள்ள அமராவதி ஆற்றில் புதைமணல் மற்றும் சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று மதியம்  கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க.கணேசன் உள்ளிட்டோர்  விபத்தில் பலியான சிறுவர்க ளின் குடும்பத்தாரின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற் றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இளம் வய தில் பலியான அந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு அரசி டம் வலியுறுத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தர உரிய நடவ டிக்கை எடுப்பதாக பி.ஆர். நடராஜன் எம்.பி., கூறினார்.  இந்த  சந்திப்பின்போது அண்ணாமலை, திருமலை, ஜி.என்.கார் டன் பகுதி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும் உடனி ருந்தனர்.