districts

img

வேறு அமைப்புகளில் இருந்து வாலிபர் சங்கத்தில் இணைந்த 38 பேர்

மன்னார்குடி, நவ.17- நீடாமங்கலம் நகரம் பாப்பையன் தோப்பு பகுதியிலிருந்து ஏ.ராஜதுரை தலைமையில் பல்வேறு கட்சியிலி ருந்து விலகி 38 வாலிபர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் டி.பி. கிஷோர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செய லாளர் டி.ஜான் கென்னடி ஒன்றிய பொருளாளர் ஏ. அருள்குமார் ஆகி யோர் அமைப்பின் எதிர்கால கடமை களைப் பற்றி பேசினார்கள். கிளையின் புதிய நிர்வாகிகளாக கிளைத் தலைவராக ஏ.ராஜதுரை, செய லாளராக ஆர்.முத்து, பொருளாளராக கே.முத்து துணைத்தலைவராக ஆர்.மாதவன் துணைச் செயலாளராக எஸ்.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.