districts

img

2 ஆவது சீசனுக்கு மலர் தொட்டிகள் அடுக்கும் பணி துவக்கம்

உதகை, செப்.24- உதகையில் நடைபெற உள்ள  2 ஆவது சீசன் மலர் கண்காட்சிக் காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டி களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி  ஞாயிறன்று துவங்கியது.  சர்வதேச சுற்றுலா தளமாக திகழக்கூடிய நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க  நாள்தோறும் ஏராளமான சுற்றுலா  பயணிகள் வருகை புரிந்து இங் குள்ள இயற்கை காட்சிகள், சுற் றுலா தளங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களுக்கு செல்வது வழக்கம்.  அவ்வாறு வரக்கூடிய சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2ஆவது  சீசன் மலர்க்கண்காட்சி நடத்தப் படுவது வழக்கம்.  இந்தாண்டு நடைபெறும் 2 ஆவது சீசன் மலர் கண்காட்சிக்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட விதைகள் மற்றும் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளும் பூந் தொட்டிகளில் மற்றும் மலர் பாத்தி கள் அமைத்து கடந்த மூன்று மாதங் களுக்கும் மேலாக பராமரிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில், 35 ஆயிரம் மலர்  தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வந்த இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், பெட்டுணியா, டெல்பினியம், டேலியா, லில்லி  ஆலந்தூரியம் போன்ற பல்வேறு  வகையைச் சேர்ந்த வண்ணமலர் கள் தற்போது பூங்காவில் பூக்க துவங்கி உள்ளன. இதையடுத்து, மலர் கண்காட்சிக்காக பூங்கா விற்கு வரும் சுற்றுலா பயணிகளை  கவரும் வகையில் பூங்காவில் தற் போது பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் மலர்  மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி யில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள் ளனர். அதேபோல் இரண்டாவது சீசனின் சிறப்பம்சமாக விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த சந்திராயன்  3 செயற்கைக்கோள் விண்கலம் வடிவமைப்பை பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் மேரி கோல்ட் மலர்களால் அடுக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2 ஆவது சீசனக்காக வருகை புரியும் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா  நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் 2 ஆவது சீசன் துவங்கும் என  பூங்கா நிர்வாகம் தெரிவித் துள்ளது.