கோவை, செப்.18- தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் ஞாயிறன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட் டது. இந்நிலையில், கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் நடை பெற்றது. சமூக நீதி நாளை கொண்டா டும் வண்ணம் நடைபெற்ற இந்த கருஞ் சட்டை பேரணியில், மார்க்சிய, அம்பேத் கரிய, பெரியாரிய ஆதரவாளர்கள் திர ளானோர் பங்கேற்றனர். சிவானந்தா காலனி பகுதியில் துவங்கிய இப் பேரணி கிராஸ் கட் சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக பெரியார் படிப்பகத்தில் நிறைவடைந்தது. இப் பேரணியில் சமூக நீதி குறித்தான முழக் கங்கள் எழுப்பட்டன. மேலும், பேரணி முழுவதும் நிமிர் குழுவினரின் பறை இசை இடம்பெற்றது.