புரோ கபடி லீக் தொடர் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஒடிடி-யில் ஹாட் ஸ்டார் நிறுவனமும் ஒளிபரப்பு செய்கிறது. இதில் ஹாட் ஸ்டாரில் நாள்தோறும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போனில் (ஸ்மார்ட்டிவி சேர்த்து) புரோ கபடி தொடரை கண்டு ரசித்து வருகின்றனர். இந்திய விளையாட்டு உலகில் ஒடிடி-யில் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே லட்சக் கணக்கானோரால் பார்க்கப்படும் வழக்கம் உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றால் இந்திய ரசிகர்கள் ஓரளவு ரசிப்பார்கள். அவ்வளவுதான் இந்திய விளையாட்டு உலகிற்கும், ஒடிடி-க்கும் உள்ள உறவு. ஆனால் கிரிக்கெட் தவிர்த்து சாதாரண லீக் தொடரான புரோ கபடியை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருப்பது இந்திய விளையாட்டு உலகில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.