districts

img

திருப்பூர் தோழர் கே.பொன்னுசாமி 10 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர், ஜன.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினரும், சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளரும், திருப்பூர் நகராட்சி முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவருமான தோழர் கே.பொன்னுசாமியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன் ஆகியோர் பொன்னுசாமியின் பணிகளை நினைவுகூர்ந்து உரையாற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, எஸ்.சுப்ரமணியன், மூத்த தோழர்கள் என்.கோபாலகிருஷ்ணன் ஆர்.ஈஸ்வரன் உள்பட வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள் கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு பொன்னுசாமி நினைவு அஞ்சலி செலுத்தினர். அதேபோல், கட்சியின் நெசவாளர் காலனி கிளை முன்பாகவும் தோழர் பொன்னு சாமி பத்தாம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.