districts

img

108 அவசர ஊர்தி வாகனம் குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி, பிப்.11- பொள்ளாச்சி காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 அவசர ஊர்தி வாகனத்தின் தேவை மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பொதுமக்களின் அவ சர கால மருத்துவ தேவைகளுக்காக 108 அவசர வாகன ஊர்தி  பயன்படுத்தப் பட்டு வருகிறது.  இதன் சேவை குறித் தும், அதன் பயன்பாடுகள் விளக்கியும், பொள்ளாச்சி காமாட்சி நகரிலுள்ள நக ராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு உட்பட்ட 108 அவசர ஊர்தி யின் மருத்துவ முதலுதவி  ஊழியரு மான சரவணக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உரையாற்றி னார். இதில் கர்ப்பிணி பெண்கள் பேறு காலத்தில்  கார், ஆட்டோ, பேருந்து  போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து, 108 அவசர ஊர்தியை அழைக்க வேண் டும். 108 ல் இரண்டு லட்சம் குழந்தை கள் ஆரோக்கியமான முறையில் பிறந் துள்ளது. மகப்பேறுவின் போது தாய் மார்கள் சிறிதும் யோசிக்காமல் 108 இல வச அவசர வாகன ஊர்திக்கு அழை யுங்கள், இது முற்றிலும் இலவசமான சேவை. மேலும் பாதுகாப்புடையது. இதில் ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு முத லுதவி மருத்துவ ஊழியர் இருப்பர். இந்த அவசர ஊர்தியில் ஒருபோதும் உயிரிழந்தவர்களின் உடல்களை அனு மதிப்பதில்லை. ஆனால் பொதுவெளி யில் உயிரிழந்தவர்களை 108ல் கொண்டு செல்வதாக பொய்யான வதந்தி பரவி வருகிறது. அதனை நம்பி  கர்ப்பிணி பெண்கள் இந்த அவசர ஊர்தியை நிராகரிக்க கூடாது. இவ் வாறு அவர் கூறினார்.