districts

img

‘சாம்சங் சிஐடியு வெற்றிக் கொண்டாட்டம்’

சாம்சங் தொழிலாளர்களின் போராட்ட வெற்றியை, சிஐடியு திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், ராஜகோபால் மற்றும் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.