districts

‘மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுக’

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, பொன்.ரமணி, ஒன்றியச் செயலாளர் கே.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.