கிருஷ்ணகிரி, ஜூலை 2- கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலு பள்ளியில் 46 ஏக்கர் பரப்பளவில் 338.95 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சியில் ஜனவரி 12 ல் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கல்லூரி முதல்வராக அசோகன் கடந்த 2021 டிசம்பரில் நிய மிக்கப்பட்டார். அவரது பணிக்காலம் கடந்த ஜூன் 30 ல் நிறைவு பெறும் நிலை யில் அன்றைய தினமே தமிழக அரசு அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.. இதுகுறித்து கல்லூரி மருத்துவர்கள் அலு வலர்கள் கூறியதாவது... கடந்த 2020இல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி யில் முதல்வராக இருந்த பொழுது மருத்துவ உபகரணங்கள் வாங்கி யதில் முறைகேடு நடந்துள்ள தாக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் தொடர்ச்சி யாக தற்போது கடந்த ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெறும் நாளில் முதல்வர் அசோகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்