districts

img

சுய உதவிக்குழு பெண்களுக்கு அவமதிப்பு இந்தியன் வங்கி கிளை மேலாளர்களை கண்டித்து போராட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 12- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி சாலையில் உள்ளது அந்தேவணபள்ளி கிராமம். இங்கு 1999 ஆம் ஆண்டு முதல் இந்தியன் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில்  20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஞ்செட்டி, உரிகம், பிலிகுண்டு, கேரட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு சேமிப்பின் மீது மானியத்தில் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. சேமிப்பில் கடன் கொடுப்பதற்கு கூட பல நாட்கள் காத்திருக்க வேண்டி யுள்ளது. அதிகமாக கமிஷன் எடுக்கப்படுகிறது. வங்கிப் புத்தகத்தில் பதிவும் செய்து கொடுப்பதில்லை. இதுகுறித்து கேள்வி கேட்கும் பெண்களை இது “உங்க அப்பன் வீட்டு வங்கியா வெளியே போங்க”என்று துணை மேலாளரும், சில ஊழியர்களும் தரக்குறைவாக பேசுவதாக கூறப்படு கிறது. இந்த பிரச்சனையை மேலாளரிடம் கொண்டு சென்றால் பதில் கிடைப்ப தில்லை. காரணம் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் ஹிந்தி மட்டுமே பேசுகிறார். எது கேட்டாலும் ஹிந்தியில் போல், சலோ, என்று மட்டுமே கூறுவதாகவும் அங்குள்ள ஊழியர்களும் சேர்ந்துகொண்டு பெண்களை வங்கிக்கு வெளியே விரட்டுவதாகவும் கூறுகின்றனர்.  ஒரு சில மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒரு சிலர் வாங்கிய சிறு தொகைக்கு குறிப்பிட்ட நாளில் கடன் தவணை கட்டமுடியாத நிலை ஏற்படுவதை காரணம் காட்டி அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்க மறுத்து வருகின்றனர். இந்தியன் வங்கி கிளை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிகிடைத்திட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளைச் செயலாளர் நாகரத்தினம், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் சந்திரசேகர் ஆகி யோர் தலைமையில் அந்தேவண பள்ளி இந்தியன் வங்கி  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாநில துணைத் தலை வர் எஸ்.டி.சங்கரி மாவட்டச் செய லாளர் ஜேம்ஸ் ஆஞசலா மேரி, மாவட்டத் தலைவர் வெண்ணிலா, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா, மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றியச் செய லாளர் வெங்கடேஷ், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனி வாசன், ராஜா உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

;