districts

காஞ்சிபுரத்திற்கு நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குக சிபிஎம் கோரிக்கை

காஞ்சிபுரம், பிப். 28- காஞ்சி மாநகருக்கு நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டச் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பொதுமுடக்க காலத்தில் காஞ்சிபுரம் வழியாக திருப்பதிக்கும், புதுச்சேரிக்கும் இயக்கப்பட்ட 56869 / 56870 2 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. தடம் எண் 56869 / 56870 மற்றும் 40900 / 66041 ஆகிய நான்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இத னால் மாணவர்கள், அலுவலர்கள் வியா பாரிகள், மூத்த குடிமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காஞ்சிபுரம் பட்டு மாநகரைச் சுற்றி ஆன்மீக சுற்றுலா தளங்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் பிற மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  காஞ்சிபுரத்திற்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எனவே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, காஞ்சிபுரம்  வழியாக புதுச்சேரி- திருப்பதி பயணிகள் ரயில்,  சென்னை கடற்கரை - காஞ்சிபுரம்- சுற்று வட்டப் பாதை பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட அனைத்தையும் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா காலத்திற்கு முன்பு உள்ள சேவையை மீண்டும் சென்னை புற நகரில் தொடங்கியதைப் பற்றி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் செய்தி வெளியிட்டதை  கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு வரவேற்கிறது. அதே வேளையில் காஞ்சிபுரத்திலிருந்து இயங்கக் கூடிய அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும் என்பதை தங்களது  கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்த வழித்தடங்களில் மீண்டும் ரயிலை இயக்காததால், சென்னை மற்றும் கடற்கரை ஆகிய இரண்டு வழித்தடங்களில் ரயில் சேவைகள் இயக்கப்படுவதால் அதிக இடைவெளி ஏற்படுகிறது. எனவே 40900 என்ற எண் கொண்ட ரயிலை காஞ்சிபுரம் அல்லது திருமால்பூர் ரயில் நிலையத்தோடு சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சுற்றுப்பாதை ரயில் சேவை அறிமுகப் படுத்தும் முன்னர் உள்ள நிலையை மீண்டும் தொடர வேண்டும். 66041 என்ற எண் கொண்ட ரயிலை காஞ்சி புரம் அல்லது செங்கல்பட்டு ரயில் நிலை யத்தோடு சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள. கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்த இடை வெளியில் மாற்றியமைத்து இரண்டு சேவைகளை நான்கு சேவைகளாக மாற்றி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;