districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி, செப். 16- கள்ளக்குறிச்சி மாவட்டம். கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்க ளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் வெள்ளியன்று (செப். 16) தொடங்கி வைத்தனர். இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள 15 பள்ளிகளிலும், ஊராட்சி மன்றத் தலைவர்,  துணைத்தலைவர், பள்ளி தலைமையாசிரி யர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கள் மற்றும் உணவு சமைக்க தேர்வு செய்யப் பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர் கள் கொண்ட மையக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் காலை உணவு சமைத்து வழங்குவதற்கு தகுதியான சுய  உதவிக்குழுவைச் சேர்ந்த 3 பேர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். மேலும், காலைச் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு பள்ளிகளில் தினசரி காலை 8.15 மணி முதல் 8.50  மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்கப்படு வதை திட்டச் செயலாக்க அமைப்புகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.மணி, மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜய லட்சுமி, கல்வராயன்மலை ஒன்றியக்குழு பெருந்தலைவர் சி.சந்திரன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜா.பாச்சாபீ ஜாகீர் உசேன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி.அலமேலு சின்னத்தம்பி, புதுப்பாலப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சாரதா சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;