districts

img

புகளூர் காகித ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்க! சிஐடியு கரூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கரூர், செப்.14 - சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்ட 9  ஆவது மாநாடு கரூரில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு சங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.  வரவேற்பு குழு தலைவர் எம். தண்டபாணி வரவேற்று பேசினார். சிஐ டியு மாநில துணைச் செயலாளர் பி.பால கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகம் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, வி.தொ.ச கரூர் மாவட்ட செயலாளர் இரா.முத்துச் செல்வன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச்  செயலாளர் சி.முருகேசன் வேலை  அறிக்கையையும், மாவட்ட பொருளா ளர் மதியழகன் வரவு-செலவு அறிக் கையையும் முன்வைத்தனர். வர வேற்பு குழு செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி நன்றி கூறினார்.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டத்தின் புதிய தலைவ ராக ஜி.ஜீவானந்தம்,  செயலாளராக சி.முருகேசன், பொருளாளராக ப.சர வணன் உள்ளிட்ட 33 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள மின்  கட்டண உயர்வை உடனடியாக திரும்ப  பெற வேண்டும்.

கரூர் மாவட்டம் குப்பம்  ஊராட்சியைச் சேர்ந்த கல்குவாரி எதிர்ப்பாளர் ஜெகநாதனை கல்குவாரி உரிமையாளர் லாரி ஏற்றி கொலை செய்துள்ளதை கண்டிப்பதோடு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை யும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். கரூரில் ஜவுளி தொழிலை பாதுகாத்திட தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளாட்சிகளில் பணி புரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.  கரூர் புகளூரில் செயல்பட்டு வரும்  தமிழ்நாடு காகித ஆலையில் 2000 -க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலா ளர்கள் நிரந்தர தன்மை கொண்ட பணி களில் பணியாற்றி வருகின்றனர். அவர் களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முறைசாரா நல வாரி யங்களின் செயல்பாடுகளை முறைப் படுத்த வேண்டும். மணல் வண்டி தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித் துள்ள குறைந்தபட்ச கூலியை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;