districts

img

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் புகளூர் 22 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் இந்துமதி வாக்குறுதி

கரூர், பிப்.8 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி  22 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  இந்துமதி அரவிந்த் அரி வாள், சுத்தியல், நட்சத்திரம்  சின்னத்தில் காகிதபுரம் காலனி குடியிருப்பு பகுதி யில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் வேட்பாளரை அன்போடு வர வேற்று கும்பம் மரியாதை, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.  வாக்குச் சேகரிப்பின் போது வேட்பாளர் இந்து மதி அரவிந்தன் கூறுகை யில், காகிதபுரம் காலனி குடி யிருப்பில் உள்ள மக்களின்  அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்ற, மக்களின் நல னில் அக்கறை கொண்டு, இன்னும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை இக்குடி யிருப்பு பகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க முயற்சிப்பேன். மக்கள் கூறும் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து, அதனை நிறைவேற்ற தொ டர்ந்து பணியாற்றிட காத்தி ருக்கிறேன். எனவே தனக்கு அரிவாள், சுத்தியல், நட்சத் திரம் சின்னத்தில் வாக்க ளித்து அதிக வாக்கு எண் ணிக்கையில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட  செயலாளர் எம்.ஜோதிபாசு, சிஐடியு சங்க கரூர் மாவட்ட செயலாளர் சி.முருகேசன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் அ.காதர்பாட்சா, எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடரா ஜன், கரூர் ஒன்றிய செயலா ளர் ராஜேந்திரன், மாதர் சங்கம் கிளை செயலாளர் அன்னகாமாட்சி, திமுக காமராஜ், சோமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;