districts

img

கரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், மார்ச் 27- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்  கள் குறைதீர்க்கும் நாள் கூட்  டம் திங்களன்று நடைபெற் றது.  கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, உதவி உபகரணங் கள், குடும்ப அட்டை கோரு தல் மற்றும் இதர மனுக்கள்  போன்றவை கேட்டு மொத்  தம் 587 மனுக்கள் பெறப்பட்டன.  இதில், மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் சார்பில் 5 நபருக்கு ரூ.21447 மதிப்பீட் டிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 20 பய னாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பில் மொத்தம் ரூ.1.20  லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டு றவுத்துறை சார்பில் மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டு  றவு கடன் சங்கம் மூலம் 3 மாற்றுத்திறனாளி பயனாளி களுக்கு தலா ரூ.50000 மதிப்  பில் மொத்தம் ரூ.1.50 லட்சம்  மதிப்பீட்டிலும் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ. 2,91,447 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட  வருவாய் அலுவலர் எம். லியாகத், கூட்டுறவு சங்கங் களின் இணைபதிவாளர் கந்தராஜா, திட்ட இயக்குநர் சீனிவாசன் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர்  (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்  காமாட்சி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

;