districts

பொதுப்பாதை அமைக்கும் பணிக்கு இடையூறு செய்பவர் மீது நடவடிக்கை எடுத்திடுக! வாழ்வார்மங்கலம் கிராம மக்கள் மனு

கரூர், செப்.19 - கரூர் வாழ்வார்மங்கலம் ஊராட்சி யில் பொது பாதை அமைக்கும் பணிக்கு  இடையூறு செய்யும் தனிநபர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சி யரிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னம்மநாயக்கன் பட்டி, குமரக்கவுண்டனூர், வீரசிங்கம் பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.  எங்களது கிராமங்களில் இருந்து முக்கிய சாலைக்கு செல்வதற்கு, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி  செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத னால் நோயாளிகள், கர்ப்பிணிகள், பணிக்கு செல்லும் பெண்கள், மாணவ, மாணவிகள் இரவு-பகல் நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  இந்நிலையை மாற்றிட, எங்கள் கிராம பகுதிகளிலிருந்து முக்கிய சாலைக்கு செல்ல 200 மீட்டர் மெட்டல் சாலை அமைத்து தரக் கோரி வாழ்வார் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவரிடம்   கோரிக்கை விடுத்தோம். ஊராட்சி மன்ற கூட்டத்தில், மெட்டல் சாலை  அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, பணிகள் நடைபெற்று வரு கின்றன. ஆனால் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக அமைக்கப்படும் பொதுப் பாதையில் தனிநபர் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்து, சாலை அமைக்கவிடாமல் இடையூறு செய்வதாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு  கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதை அமைக்க முடியா மல் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட் டுள்ளன. ஊர் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று கரூர் மாவட்ட ஆட்சியர்,  கடவூர் வட்டாட்சியர், கடவூர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் பொதுப் பாதைக்கு இடையூறாக உள்ள தனிநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2-வது முறை யாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளித்தனர். கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம  மக்கள் சார்பில் கடவூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரி வித்துள்ளனர்.

;