districts

img

வீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு

கரூர், செப்.28 - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்  கீழ் புலியூரில் 288 அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடி யிருப்பு கேட்டு விண்ணப்பித்தவர் களில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புலியூரில் உள்ள ராணி மெய் யம்மை திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) எம்.எஸ்.தண்டபாணி தலைமை யில், 288 குடியிருப்புகளில் 277 குடியிருப்பு கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த குலுக்க லில் பங்கேற்க 19 பேர் வரவில்லை,  மற்ற அனைவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மேலும் தமிழக அரசு ‘நம் குடியிருப்பு நம் பொறுப்பு’ என்ற திட்டத்தின் மூலம் குடி யிருப்பு வாசிகள் குடியிருக்கும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு  வழங்கும் விதமாக இத்திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்போர் நலச் சங்கம் துவக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற் கும் ரூ.250 பங்களிப்பாக வசூலிக்கப்படும். இதில் அரசின் பங்களிப்பாக ஒரு வீட்டிற்கு ரூ.250 வழங்கப்படும். மொத்தம் ஒரு வீட்டிற்கு 500 ரூபாய் பங்களிப்பாக பெற்று குடியிருப்பு பகுதியை பராமரிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் நிர்வாக பொறியாளர் எஸ்.தன சேகரன், உதவி நிர்வாக பொறியாளர் கே.பி. தமிழரசு, நகராட்சி ஒப்பந்ததாரர் திருச் செல்வம் மற்றும் புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், வருவாய் ஆய்வாளர் ஜெயவேல்ராஜ், புலியூர் கிராம  நிர்வாக அலுவலர் ஏ.கிளாரா சினேகலதா, புலியூர் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் டி.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட  னர்.

;