districts

img

மின் வாரியத்தை தனியார்மயமாக்காதே!

கரூர், ஜூன் 29 -  மின் வாரியத்தில் உள்ள  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப் பளு ஒப்பந்தத்திற்கு எதி ராக வெளியிட்டுள்ள உத்தர வுகளை திரும்பப் பெற வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனி யார் மயப்படுத்தும் நடவ டிக்கையை கைவிட வேண் டும். பணியாளர்கள் மற்றும்  ஓய்வூதியர்களுக்கு வழங்க  வேண்டிய பணப் பயன் களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். 

அரசு ஊழியர்கள் பெறு கிற குடும்ப நல நிதி ரூ.5  லட்சத்தை மின் வாரியத் திலும் அமல்படுத்த வேண் டும். மின் விபத்தில் உயிரி ழக்கும் மின்வாரியப் பணியா ளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பின்  (சிஐடியு) கரூர் மாவட்டக்  குழு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட மின்வா ரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன், மின் ஊழி யர் சங்க கரூர் மண்டல தலை வர் கே.தனபால், டிஎன்பிஇஓ  சங்க மாநில துணைத்  தலைவர் ஜி.கோபால கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும்  மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.