districts

img

விதிகளை மீறி ஆசிரியர்கள் பணிமாறுதல் முதல்வர், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர், ஜூன் 4 - முதல்வர், மின்துறை அமைச்சர் தலையிட்டு சுமூக  தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சிஐடியு சங்க மாநில தலைவர் அ.சவுந்தரராசன்  பேசினார். கரூரில் 6 ஆசிரியர்களை விதிமுறைகளை மீறி ஒன்றியம் விட்டு ஒன்றியம்  பணி மாறுதல் செய்துள்ள உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர் விரோ தப் போக்குடன் செயல்படும் கரூர் மாவட்ட கல்வி அலுவ லர் ஆர்.மதன்குமார் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத் தியும் தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் சார்பில் மே 30 ஆம்  தேதி முதல் கரூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போ ராட்டம் 5 நாட்களாக நடை பெற்று வருகிறது.  சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் 5 ஆம்  நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது விதிமுறைகளை மீறி  எடுக்கப்படும் நடவடிக்கை கள் வருத்தமாக உள்ளது. அரசு அதிகாரிகளின் தவ றான போக்கால் ஆளும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. கரூர் மாவட் டத்தில் சங்கம் மூலம் போராட் டம் நடத்தியதற்காக 6 ஆசிரியர்களை ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி  மாறுதல் செய்து விதிமுறை களை மீறி நடவடிக்கை எடுத் துள்ளனர். இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. ஆறு ஆசிரியர்கள் விதி முறை மீறிய இடமாறுதல் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர்  தலையிட்டு சுமூக தீர்வு  ஏற்படுத்த வேண்டும். நியாமான கோரிக்கைகளுக் காக போராடிய இவர்கள் மீது  நடவடிக்கை எடுத்துள்ள தால், இவர்கள் மனஉளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு இன்னல் களை சந்தித்துள்ளனர்” என்றார். போராட்டத்திற்கு மாநில  துணைத் தலைவர் ரவிச் சந்திரன் தலைமை வகித் தார். கரூர் மாவட்ட செயலா ளர் ஜ.ஜெயராஜ் வரவேற் றார். மாநில பொதுச்செயலா ளர் ச.மயில் போராட் டத்தை நிறைவு செய்து பேசினார். மாநில செயலா ளர் கோ.வீரமணி, புதுக் கோட்டை மாவட்ட செயலா ளர் த.ஜீவன்ராஜ், தஞ்சா வூர் மாவட்ட செயலாளர் க. மதியழகன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சா. சித்ரா, திருவாரூர் மாவட்ட செயலாளர் காசி.ராஜா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;