கரூர், ஏப்.10- 2018ம் ஆண்டு காவேரி நீர் கோரிக்கைக் காக கரூர் மாவட்டம், புகளூர் பாலத்துறை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திமுக புகளூர் பேரூர் கழக செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், தொமுச சங்க மாவட்ட செயலாளர் அண்ணாவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே. சண்முகம் உள்ளிட்ட 74 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வேலாயுதம்பாளையம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். விடு விக்கப்பட்டாலும் போராடியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. 7.4.22 அன்று இந்த வழக்கு விசார ணைக்கு வந்த போது வழக்கறிஞர் சுபாஷ், உரிமைக்காக போராடியவர்கள் மீது காவல்துறை தேவையில்லாது வழக்கு தொடுத்ததுடன் 4 வருடங்களாகியும் இது வரை சம்மன் அளிக்காத போக்கை சுட்டிக் காட்டி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி னார். குற்றவியல் நீதிபதி கே.அம்பிகா, வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று மக்கள் பிரச்சனைக்காக போராடுவது என் பது அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கி யுள்ள உரிமை. போராட்டத்தை மட்டும் காரணம் காட்டி வழக்கு போடக் கூடாது. போராட்டத்தில் வன்முறை நடந்தால் மட்டுமே வழக்குப் போட வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்தார். கரூர் மாவட்டத்தில் உழைப்பாளி மக்க ளுக்கு எதிராக போடப்படுகின்ற இதுபோன்ற வழக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் சுபாஷ் தொடர்ந்து வாதாடி வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று இவ்வழக்கிலும் சுபாஷ் சிறப்பாக வாதாடி வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞர் சுபாஷ் அவர்களுக்கு சிஐ டியு சங்க கரூர் மாவட்டக்குழு சார்பில் நன்றி யும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கி றோம்.