கரூர், பிப்.15 - கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி 22 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் இந்துமதி அரவிந்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் காகிதபுரம் காலனி குடியிருப்பு பகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் ரா.இளங்கோ வாக்குச் சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு, சிஐடியு கரூர் மாவட்ட செயலாளர் சி.முருகேசன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர் (எ) குணசேகரன், புகழூர் நகர செயலாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க கிளை செயலாளர் அன்னகாமாட்சி, திமுக காமராஜ், சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.