districts

img

ஈசநத்தம் பி.நந்தினிக்கு சிறந்த விற்பனையாளர் பரிசு

கரூர், ஏப்.7- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தம் நியாயவிலை கடையில் பணிபுரியும் பி.நந்தினி மாநில  அளவில் சிறந்த விற்பனையாளருக்கான 2 ஆவது  பரிசு பாராட்டுச் சான்றிதழையும், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலையையும் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஏப்ரல் 5 அன்று  வழங்கினார்.  இதனை யொட்டி நியாயவிலைக்கடை விற்பனை யாளர் பி.நந்தினி வியாழனன்று கரூர் மாவட்ட ஆட்சி யர் மரு.த.பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.  பின்னர் மாவட்ட ஆட்சியர், பி.நந்தினிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.