districts

மின்சார வாரியம் நட்டத்திற்கு யார் காரணம்? மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பேட்டி

கடலூர்,ஜூலை.17- தமிழ்நாடு மின்சார வாரியம் தனி யார் மயமாக்குவதை எதிர்த்தும் காலிப் பணியிடத்தை  நிரப்பப் வலியுறுத்தியும் ஜூலை 20 அன்று தமிழக முழுவதும் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட் டம் நடத்த மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர். ராஜேந்திரன் தெரிவித்தார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது:- மின்சாரத்துறையில் சுமார் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில் சுமார் 5,300 பதவியிடங் களை நிரப்பிட வெளியிடப்பட்ட அறி விக்கை ரத்து செய்தனர். புதிய நிய மனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன சிக்கல்?
கடந்த ஓராண்டாக எந்த நியமன மும் இல்லாததால் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு தரமான தளவாடச் சாமான்கள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தற்போது 1 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பழைய தளவாடங்களையே சீரமைத்து பொருத்தியுள்ளோம்.  நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மின் மண்ட லங்களில் சுமார் 18 துணை மின் நிலையங்களையும், வடசென்னை யில் அனல்மின் நிலையம்-3 ஆகிய வற்றின் பராமரிப்பு பணிகளையும் தமிழக அரசு தனியார் வசம் வழங்கி விட்டது.

காத்திருப்பு போராட்டம்
மின்துறையை தனியார் மய மாக்கும் இந்த செயலால் பணியிடங்களில் விபத்து தவிர்க்க முடியாததாகும். மேலும், தவறுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. எதிர்காலத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தனி யார் மயத்தை அரசு கைவிட வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகங்களில் வரும் 20 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நிய மனம், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை 4 ஆண்டு களாக நடத்தாமல் உள்ளது போன்றவை கடந்த அதிமுக ஆட்சி யில் உள்ளதைப் போன்றே தற்போதும் தொடர்கிறது. தமிழக மின்துறைக்கு ரூ.1.53 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.6.93 செலவாகிறது. ஆனால், விவசாயத்திற்கு, கைத்தறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதோடு, வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமாக வழங்கப்படு கிறது. இதற்கான, மானியத்தை தமிழக அரசு கடந்த 10 ஆண்டு களாக மின்சாரத்துறைக்கு வழங்க வில்லை. இத்தொகையை வழங்கியிருந்தாலே மின்சாரத்துறை நட்டத்திற்கு சென்றிருக்காது. சேவைத்துறையான மின்சாரத்துறை யில் நட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் டி.பழனிவேல், மாவட்டத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.