ஸ்ரீமுஷ்ணத்தில் பள்ளிக்குச் செல்ல காத்திருந்த மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட மேல் புளியங்குடி கிராமத்தில் வசிக்கும் வீரமணி மகன் ஜீவா( 17 ) இவர் விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக புளியங்குடி கிராமத்தின் அருகே உள்ள பெளாந்துறை வாய்க்கால் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த்(22) என்பவர் ஜீவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது அப்போது ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜீவாவை 108 அவசர ஊர்தி மூலம் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்குச் சென்ற இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலையில் பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்ற மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது