districts

img

ஊதிய உயர்வு பேச்சு உடனே துவக்குக மின் ஊழியர் கடலூர் மாநாடு வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 19- ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலி யுறுத்தி யுள்ளது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் கடலூர் மின் வட்ட 16ஆவது மாநாடு மாநில துணை பொதுச்செயலாளர் டி.பழனி வேல் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜெய ராமன் சங்க கொடியை ஏற்றி னார். இணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கோட்டச் செயலாளர் டி.ஜீவா வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் என். தேசிங்கு வேலை அறிக்கை யையும், பொருளாளர் என்.கோவிந்தராசு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.காங்கேயன், மாநில துணைத்தலைவர் கே. அம்பிகாபதி, மண்டலச் செயலாளர் ஆர்.சிவ ராஜ், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் வி.கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடா சலம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கோட்டத் தலைவர் ஆர்.ஸ்ரீதர் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும், பகுதிநேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சிட்டு அக்ரிமெண்ட் அடிப்படையில் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும், தரமான தளவாடப் பொருட்களை வழங்க வேண்டும், வாரிய ஆணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
சிறப்பு தலைவராக எஸ்.ரவிச்சந்திரன், வட்டத் தலைவராக டி.பழனிவேல், செயலாளராக என்.தேசிங்கு, பொருளாளராக டி.ஜீவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;