districts

img

பட்டா கேட்டு கிராம மக்கள் முற்றுகை

கடலூர், மே 17- கடலூர் ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று (மே 16) மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர்  தலைமையில் நடை பெற்றது.  இதில் ஸ்ரீமுஷ்ணம் க.தொழுர் ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.  முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஸ்ரீமுஷ்ணம் க.தொழுர் ஆதிதிராவிடர் காலனியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். இது நாள் வரை வீட்டு மனைப் பட்டா வழங்கவில்லை. எங்கள் பகுதியில் வசிக்கக் கூடிய மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு 30 ஆண்டுகளாகிறது. இலவச மனை கொடுப்பதற்கு அரசு சார்பில் நிலம் எடுக்கப்பட்டு 15 வருடங்களை கடந்து விட்டது. ஆனாலும் இது வரைக்கும் எங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதற்கு, பதிலளித்த அதி காரிகள் இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். இதனை யடுத்து, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

;