districts

சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு நிவாரணம்: சிபிஎம் கோரிக்கை

கடலூர், மே 28- கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்து வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த சூறைக்காற்று மழையால் கடலூர் ஒன்றியம் ராமாபுரம், சாத்தங்குப்பம், ஒதியடிகுப்பம், காட்டு பாளையம், உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்ட 2 லட்சம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர். வாழை மரத்திற்கு 150 ரூபாய் செலவு செய்த நிலையில் தற்போது பூ வைத்து, கொலை தள்ளிய நிலையில் வாழை மரம் சாய்ந்தது மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வேளாண் துறையும் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;