districts

கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள்: அமைச்சர்

சிதம்பரம், மே22-  திமுக ஆட்சிக்கு வந்த பின், ‘ஆன்லைன்’ வழி யாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.  தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சிதம் பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு உணவு வாணிப கழக கிடங்கில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும். இதுவரை, 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. நெல் வாங்கியதும், எந்தெந்த விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும் என, மண்டல மேலாளர், தலைமை அலு வலகத்திற்கு தெரிவித்தால், 2 நாட்களில் பணம் வழங்கப் படுகிறது. சில கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் பெறுவதாக தகவல் வரு கிறது. இதை கட்டுப்  படுத்த, அனைத்து நேரடி கொள்முதல் நிலை யங்களிலும், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் உள்ள மனுக்கள் மீது, ஆட்சியர்  நடவடிக்கை எடுப்பார். இல்லையெனில், உணவுத்துறை செய லர் அல்லது மேலாண் இயக்கு னருக்கு அனுப்பினால், அவர்கள் நடவடிக்கை எடுப்பர். நேரடி கொள்முதல் நிலையங்களில் தவறு செய்த, 150க்கும் மேற்பட் டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துவ ரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

;