districts

img

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கடலூரில் குடியிருப்போர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 26- பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், பி.எஸ்.என்.எல்., வங்கி, ரயில்வே உள்ளிட்ட துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், கடலூரில் மருத்துவக் கல்லூரி, அரசு பெண்கள் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் மற்றும் சட்டக் கல்லூரி அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் டி.புரு ஷோத்தமன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவுரையாற்றினர். கூட்டமைப்புபொருளாளர் சுகுமாறன்,  நிர்வாகிகள் கண்ணபிரான், மாயவேல், கோபால், லட்சுமி நாராயணன், காசிநாதன், ரமணி, கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் உள்ளிட்ட பலர் பேசினர்.

;