கடலூர்,மார்ச் 19- பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு, 63 வயதாகும் இவர், கடந்த 2019ம் ஆண்டு, டிச 12ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதையொட்டி பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து தேசிங்கை கைது செய்து கடலுார் ‘போக்சோ’ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, தேசிங்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ4ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதில், மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே இழப்பீடாக 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மீதமுள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை 30 நாட்களுக்குள் பெற்றுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா செல்வி ஆஜரானார்.