districts

img

விவசாயிகளை ஏமாற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் விருத்தாசலம் ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சாடல்

கடலூர்,ஜூலை 1- கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றி வரும் தனியார் கரும்பு சர்க்கரை ஆலைகள் மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கியக் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். கரும்பு ஏற்றி வந்த வாகன வாடகை, தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பணத்தை உடனே விடு விக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேணு கோபால், வெங்கட்ரா மன், ராம லிங்கம், தரணிதரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில உதவித் தலை வர் கோ. மாதவன், மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன், போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் அசோகன்,  இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம்  மாவட்டப் பொரு ளாளர் கலைச்செல்வன், மகாலிங்கம், வக்கழறிஞர் குமரகுரு, ஜெயபால், கொளஞ்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போரா ட்டத்தின்போது செய்தி யாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “கட லூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் தனியார் சர்க்கரை அலை, சித்தூர் சர்க்கரைஆலை நிர்வாகங்கள் கரும்பு விவசாயிகளை ஒட்டு மொத்தமாக மொட்டை அடித்து, ஆலைகளை மூடி ‘திவால்’ என அறிவிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளன” என்றார். கரும்பு விவசாயிக ளுக்கு ரூ.182 கோடி கொடுக்க வேண்டிய சர்க்கரை ஆலை நிர்வா கங்கள், விவசாயி களின் பெயரில் ரூ.300 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளன.  ஏற்கனவே ரூ. 300 கோடி மோசடி செய்துள்ளதாக ஆலை நிர்வாகத்தின் மீது 10 வழக்குப்பதிவு செய்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. சொத்துக்களை பறிமுதல் செய்யவில்லை என்பதை பாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.

;