tamilnadu

img

பற்றாக்குறையை சமாளிக்க மக்களை கசக்கிப் பிழியும் மோடி அரசு

சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை, பிப். 17- பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க சாமானிய மக்கள் மீது  சுமையை ஏற்றி அவர்களை கசக்கிப் பிழிகிறது மத்திய பாஜக அரசு என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை  மாவட்டக்குழுக்கள் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திங்களன்று (பிப்17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்து கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:   நாட்டின் பொருளாதாரத்தையே திவாலாக்கி வரும் மத்திய அரசு அடித்தட்டு உழைப்பாளி மக்க ளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக் குறியாக்கி வருகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் 30 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வரவு 22 லட்சம் கோடிதான். மீதி இருக்கும் 8 லட்சம் கோடியை எப்படி சரி செய்யப்போகிறார்கள் என தெரி விக்கவில்லை. இதை சரி செய்ய, பட்ஜெட் முடிந்த அடுத்த நாளே சமை யல் எரிவாயு சிலிண்டர் விலையை  147 ரூபாய் உயர்த்தி விட்டனர். விலை வாசி உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள். விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் விரோத நட வடிக்கைகள் மூலம் 8 லட்சம் கோடி ரூபாயை ஏழை மக்களின் தலையில் ஏற்றப் பார்க்கிறது.

பரம்பரைச் சொத்தா?
 

2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்பனைக்கு வந்து விட்டன. இது என்ன மோடியின், நிர்மலா சீத்தாராமனின் பரம்பரைச் சொத்தா? இந்த நிறுவனங்கள் மக்க ளுடைய சொத்து. அதனுடைய பங்கு கள் தனியார்மயமானால் அம்பானிக்கும், அதானிக்கும்தான் போய்ச் சேரும். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு வழங்கும் வரி வரு மானம் 40 ஆயிரம் கோடி ரூபாய். அந்த நிறுவனம் ஈட்டுகிற லாபம் 7 ஆயிரம் கோடி ரூபாய். அதையும் தனியாருக்கு விற்பனை என மத்திய அரசு அறிவித்து விட்டது. நாட்டில் 600க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றையும் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரயில் கட்டணத்தை தீர்மானிப்பது யார்?

பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இனி ரயில்வே கட்டணத்தை யார்  தீர்மானிப்பார்கள்? அரசு தீர்மானிக்க முடியுமா? ஆவடி கனரக தொழிற்சாலை, ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனம், சேலம் ஸ்டீல், ஆண்டுக்கு ரூ.1600 கோடி  லாபமீட்டக்கூடிய நெய்வேலி  நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் அடி நாதமாக விளங்கக் கூடிய அனை த்து பொதுத்துறை நிறுவன பங்கு களையும் மத்திய அரசு தனியாரிடம் தாரைவார்க்க துடிக்கிறது.  மத்திய அரசு ஆட்சி நடத்துகிறதா அல்லது வியாபரக் கடை நடத்துகிறதா?  இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி னார். 

100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.1400கோடி சம்பள பாக்கி

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு, முதல்வருக்கு, அமைச்சர்களுக்கு பாக்கியில்லாமல் ஊதியம் வழங்க பணம் இருக்கிறது. ஆனால் ஏழை உழைப்பாளிக்கு மட்டும் பாக்கி வைக்கிறது அரசு. ஏழை எளிய உழைப்பாளி மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து போராடு வோம் என்றும் இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார். சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், தென்சென்னை மாவட்டச்யெலாளர் ஏ.பாக்கி யம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ வட சென்னை மாவட்டச்செயலாளர்  மூர்த்தி  ஆகியோர் பங்கேற்று பேசினர்.