கடலூர், ஜூலை 12 - தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் ஜூன் 1 முதல் 10 வரை திட்டமிடப்பட்டு நடை பெற்றது. இதில், கடலூர் மாவட்டத்தில் இடைக்கமிட்டிகளில் சேகரிக்கப்பட்ட தீக்கதிருக்கான 203 சந்தாக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நெல்லிக்குப்பம் பகுதிக்குழு சார்பில் 5 ஆண்டு சந்தா மற்றும் 12 ஆறு மாத சந்தாவை பகுதிச் செயலாளர் எம். ஜெயபாண்டியன் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி நகரத்தின் சார்பில் 15 ஆண்டு சந்தாவிற்கான தொகையை நகர செயலாளர் ஆர். உத்திராபதி வழங்கி னார். பண்ருட்டி ஒன்றியத்தின் சார்பில் 10 ஆண்டு சந்தாவிற்கான தொகையினை ஒன்றிய செயலாளர் எஸ்.கே. ஏழுமலை வழங்கினார்.
செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், எஸ். திருஅரசு, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். வடலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடலூர் பேரூர், குறிஞ்சிப்பாடி நகரம் மற்றும் குறிஞ்சிப் பாடி ஒன்றியம் சார்பில் 22 ஆண்டு சந்தாக்கள், 30 ஆறு மாத சந்தாக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி, வடலூர் அமைப்பு செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலத்தில்வட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் 34 ஆண்டு சந்தா மற்றும் 5 ஆறு மாத சந்தா வழங்கப்பட்டது. வேப்பூர் கமிட்டி சார்பில் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் 9 ஆண்டு சந்தாக்கள் வழங்கினார். திட்டக்குடி கமிட்டி சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் 8 ஆண்டு சந்தா, 3 ஆறு மாத சந்தா வழங்கினார். நெய்வேலி அலுவலகத்தில் 50 ஆண்டு சந்தாக்களை நகர செயலாளர் பாலமுருகன் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 153 ஆண்டு சந்தா மற்றும் 50 ஆறு மாத சந்தா என 203 சந்தாவிற்கான தொகை ரூ. 3 லட்சத்து 58 ஆயிரத்து 500- மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம் வழங்கப்பட்டது.