districts

img

சிப்காட் தொழிற்பேட்டையில் சிஐடியு சங்கம் துவக்க விழா

கடலூர், ஜன. 25- கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை கவுமெண்ட் எம்பிளாயிஸ் யூனியன்  (சிஐடியு) துவக்க நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர் டி.பிரபு தலைமை யில் நடைபெற்றது. செயலாளர் முரளிதரன் வரவேற்றார். பொருளாளர்  ஆர்.குப்புசாமி, துணைத் தலைவர் கே.அன்பரசன், அறிவுக்கரசு, இணை செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டத் தலைவர் டி.பழனி வேல், இணைச் செயலாளர்கள் திருமுருகன், கே. ஸ்டாலின், அனந்த நாராயணன், ஆர்.ஆளவந்தார், சாந்தகுமாரி, எஸ்.தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;