districts

சென்னை முக்கிய செய்திகள்

ஆசிரியையை ஏமாற்றிய பேராசிரியர் மீது வழக்கு
கடலூர், ஜன. 23- புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் வேதகிரி மகன் கார்த்திகேயன் (30). அரியூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலைப்பார்த்து வரும் 29 வயது ஆசிரியையுடன் முக நூலில் பழக்கமாகி உள்ளார். பின்னர், இந்த பழக்கம் அதிகமாகி காதலாக மாறியதாம். இந்நிலையில், ஆசிரியை தனது வீட்டில் யாரும் இல்லாத போது கார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்துள்ளார். சில நாட்களுக்கு பின்னர், கார்த்திகேயனை திரு மணத்திற்கு ஆசிரியை வற்புறுத்திய போது அவர் மறுத்து விட்டாராம். எனவே, ஆசிரியை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்.

எண்ணை துரப்பண பணிகளுக்கான குழாய் உற்பத்தி துவக்கம்
சென்னை ஜன. 23- எண்ணை துரப்பண பணிகளுக்கான த்ரெடிங் வசதி கொண்ட குழாய்கள் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக எண்ணை குழாய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜிண்டால் சா லிமி டெட் நிறுவனம் த்ரெடிங் வசதியை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள ஹண்டிங் எனர்ஜி சர்வீ சஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டு செயல்பாடு மூலமாக முதன்மையான ஓசிடிஜி எனப்படும் குழாய்களில் த்ரெடிங் பதிக்கும் ஆலையை நாசிக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இத னால் த்ரெடிங் வசதி கொண்ட முதன்மையான எண்ணெய் குழாய்களை இந்தி யாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண தொழில்களில் ஈடுபட்டுள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த துறையில் நாடு தன்னிறைவு அடையவும் வழிவகுக்கும் என்று ஜிண்டால் சா லிமிடெட் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

 

;